பஸ் ஸ்டாப்பில் நிழற்கூடம் தேவை
எருமப்பட்டி, டிச. 12-எருமப்பட்டி அருகே, பொட்டிரெட்டிப்பட்டி பஞ்., உள்ளது. இங்கு, 1,000க்கும் மேற்பட்ட குடியிருப்புகளில் மக்கள் வசித்து வருகின்றனர். இவர்கள், பொட்டிரெட்டிப்பட்டி பஸ் ஸ்டாப்பில் இருந்து நாமக்கல், சேந்தமங்கலம், துறையூர் உள்ளிட்ட பகுதிகளுக்கு வேலைக்கு சென்று வருகின்றனர். இதேபோல் பள்ளி மாணவ, மாணவியர் நாமக்கல், ரெட்டிப்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் உள்ள பள்ளிகளுக்கு செல்ல, இங்குள்ள பஸ் ஸ்டாப்பை பயன்படுத்துகின்றனர். ஆனால், பயணியர் நிழற்கூடம் இல்லை. அமர்வதற்கு இருக்கைகளும் இல்லை. இதனால் மழை, வெயில் காலங்களில் பயணிகள் கடும் அவதிக்குள்ளாகின்றனர். எனவே, நெடுஞ்சாலைத்துறையினர் இந்த பஸ் ஸ்டாப்பில் நிழற்கூடம் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.