மேலும் செய்திகள்
வடலுாரில் மர்மமான முறையில் தீப்பற்றி எரிந்த கார்
16-Nov-2024
ப.வேலுார்: நாமக்கல் மாவட்டம் கபிலர்மலையை சேர்ந்தவர் சுரேஷ், 28; சமையல் கான்ட்ராக்டர். இவரது மனைவி துர்கா, 20; இருவ-ருக்கும் கடந்த, 11ம் தேதி திருமணம் நடந்தது. சமையல் செய்ய துர்கா காஸ் அடுப்பை நேற்று காலை பற்ற வைத்தார். எரியா-ததால் சுரேஷ் உதவிக்கு சென்று, அடுப்பை பற்ற வைத்தார். அப்-போது எதிர்பாராதவிதமாக காஸ் கசிந்து, சுரேஷ் உடையில் தீப்-பற்றி எரிந்தது. இதைப்பார்த்த துர்கா கணவரை காப்பாற்ற முயன்-றபோது அவர் மீதும் தீப்பிடித்தது.புது மண தம்பதியின் சத்தம் கேட்டு சென்ற அக்கம்பக்கத்தினர், தீயை அணைத்து இருவரையும் மீட்டு நாமக்கல் அரசு மருத்துவம-னையில் சேர்த்தனர். தீ விபத்து குறித்து ஜேடர்பாளையம் போலீசார் விசாரிக்கின்றனர். திருமணமான மூன்று நாளில் தீ விபத்தில் புதுமண தம்பதி சிக்கியது. அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.
16-Nov-2024