உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / வடமாநில தொழிலாளர்கள் பள்ளிப்பாளையம் வருகை

வடமாநில தொழிலாளர்கள் பள்ளிப்பாளையம் வருகை

பள்ளிப்பாளையம் : பள்ளிப்பாளையம் பகுதிக்கு, வடமாநில தொழிலாளர்களின் வருகையால் பணிகள் வேகமெடுத்துள்ளது.பள்ளிப்பாளையம், வெப்படை பகுதியில் செயல்பட்டு வரும் நுாற்பாலை மற்றும் கட்டுமானம், ஓட்டல், பேக்கரி, பானிபூரி, பாஸ்ட்புட் கடைகள் மற்றும் பல்வேறு தொழில் நிறுவனங்களில், வடமாநிலத்தை சேர்ந்தவர்கள் வேலை செய்து வருகின்றனர். குறிப்பாக வெப்படை பகுதியில், 80க்கும் மேற்பட்ட நுாற்பாலைகள் செயல்படுகிறது. இதில் வட மாநில தொழிலாளர்கள் அதிகளவு வேலை செய்து வருகின்றனர். லோக்சபா தேர்தல் சமயத்தில் அவர்கள் ஓட்டுபதிவுக்காக, தங்கள் சொந்த மாநிலங்களுக்கு சென்று விட்டனர். இதனால் தொழில்களில் சற்று தொய்வு ஏற்பட்டது. இந்நிலையில், மீண்டும் வடமாநில தொழிலாளர்கள் வருகையால் வேலைகள் வேகமெடுத்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



புதிய வீடியோ