உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / மே 1ல் மாவட்டத்தில் 310 பஞ்.,களில் கிராம சபை

மே 1ல் மாவட்டத்தில் 310 பஞ்.,களில் கிராம சபை

நாமக்கல்:'வரும் மே, 1ல், 310 கிராம பஞ்.,களில், கிராம சபை கூட்டம் நடக்கிறது' என, நாமக்கல் கலெக்டர் உமா தெரிவித்துள்ளார்.இதுகுறித்து, அவர் வெளியிட்ட அறிக்கை: நாமக்கல் மாவட்டத்தில் உள்ள, 310 கிராம பஞ்.,களிலும், வரும், மே, 1ல், கிராமசபை கூட்டம் நடக்கிறது. அன்று காலை, 11:00 மணிக்கு நடக்கும் கூட்டத்தில், கிராம பஞ்., நிர்வாகம் மற்றும் பொதுநிதி செலவினம் குறித்து விவாதிக்க வேண்டும். இணையவழி மனைப்பிரிவு மற்றும் கட்டட அனுமதி வழங்குதல், சுய சான்றிதழை அடிப்படையாக கொண்டு கட்டட அனுமதி பெறுதல், வரி மற்றும் வரியில்லாத வருவாய் இனங்களை, இணையவழி செலுத்துவதை உறுதிபடுத்துதல் மற்றும் இதர பொருட்கள் குறித்து விவாதத்திற்கு எடுத்துக் கொள்ளப்படுகிறது. இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை