உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / ஓங்காளியம்மன் கோவில் விழா: தீர்த்தக்குட ஊர்வலம்

ஓங்காளியம்மன் கோவில் விழா: தீர்த்தக்குட ஊர்வலம்

திருச்செங்கோடு:திருச்செங்கோட்டில் பிரசித்திபெற்ற சின்ன ஓங்காளியம்மன் கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலில், மாசி மாத குண்டம் திருவிழா கடந்த, 16ல் பூச்சாட்டுதலுடன் துவங்கியது. தொடர்ந்து குண்டம் இறங்க ஆயிரக்கணக்கான பக்தர்கள் காப்பு கட்டும் நிகழ்ச்சி நடந்தது. காப்பு கட்டிய பக்தர்கள், மலையடி குட்டையில் இருந்து ஊர்வலமாக தீர்த்தக்குடம் எடுத்து ஊர்வலமாக வந்தனர். தொடர்ந்து, புனித நீரைக்கொண்டு அம்மனுக்கு அபிஷேகம் செய்தனர். இன்று, அலகு குத்தும் நிகழ்ச்சி நடக்கிறது. 26ல் பூச்சொரிதல் நிகழ்ச்சியும், 27ல் குண்டம் திருவிழாவும் நடக்கிறது. மார்ச், 2ல் தப்பாட்டம், வாணவேடிக்கை நிகழ்ச்சியுடன், அம்மன் திருவீதி உலா வந்து தயிர் சாதம் வழங்கும் நிகழ்ச்சியுடன், குண்டம் விழா நிறைவு பெறுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை