உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / ப.வேலுார் தி.மு.க., பிரமுகரிடம் இருந்து ரூ.120 கோடி கோவில் நிலம் மீட்பு

ப.வேலுார் தி.மு.க., பிரமுகரிடம் இருந்து ரூ.120 கோடி கோவில் நிலம் மீட்பு

ப.வேலுார்: ப.வேலுார் அருகே, தி.மு.க., தலைமை பொதுக்குழு உறுப்-பினர் சாமிநாதன் ஆக்கிரமித்திருந்த, 120 கோடி ரூபாய் மதிப்பு கோவில் நிலத்தை, ஹிந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் மீட்க வந்தனர். அப்போது, ஆக்கிரமிப்பாளர்கள் வாக்குவா-தத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.நாமக்கல் மாவட்டம், ப.வேலுார் அருகே, பொத்தனுார் டவுன் பஞ்., 4வது வார்டு, காவேரி நகர் பகுதியில், 12.42 ஏக்கர் நிலம் உள்ளது. இந்த இடம், பொத்தனுார் தேவராய சமுத்திரத்தில் அமைந்துள்ள காசி விஸ்வநாதர் கோவிலுக்கு சொந்தமானதாகும். இந்த நிலத்தை, அப்பகுதியை சேர்ந்த சிலர் ஆக்கிரமித்து பயன்ப-டுத்தி வருவதாக, பரமத்தி மாவட்ட உரிமையியல் நீதிமன்றத்தில் வழக்கு நடந்து வந்தது. கடந்த, 21ல், ஆக்கிரமித்துள்ள நிலம், காசி விஸ்வநாதர் கோவிலுக்கு சொந்தமானது எனவும், அதை கையகப்படுத்த, ஹிந்து சமய அறநிலையத்துறைக்கு, நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது.இதையடுத்து, ஹிந்து சமய அறநிலையத்துறை ஈரோடு, நாமக்கல் கோட்ட இயக்குனர் பரஞ்சோதி தலைமையில், நாமக்கல் ஹிந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையர் சுவா-மிநாதன், ஆலய நிலங்கள் தனி தாசில்தார் சுந்தரவல்லி, ஆர்.ஐ., ஜெனனி ஆகியோர், நேற்று ஆக்கிரமிப்பை அகற்ற சம்பந்தப்-பட்ட இடத்திற்கு வந்தனர். அப்போது, நிலத்தை ஆக்கிரமித்து பயன்படுத்தி வந்த, தி.மு.க., தலைமை பொதுக்குழு உறுப்பினர் சாமிநாதன், 60, மற்றும் இவரது உறவினர்கள் பழனியப்பன், செல்வராஜ், தங்கராசு, மணி ஆகியோர், அதிகாரிகளை தடுத்து வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.இதனால், அறநிலையத்துறை அதிகாரிகள், ப.வேலுார் போலீசா-ருக்கு தகவல் தெரிவித்தனர். ப.வேலுார் எஸ்.ஐ., ரவிச்சந்திரன் தலைமையில் வந்த போலீசார், அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட, தி.மு.க., பொதுக்குழு உறுப்பினர் சாமிநாதன் மற்றும் அவரது உறவினர்களை அப்புறப்படுத்தினர். தொடர்ந்து, ஆக்கிர-மிப்புகளை அகற்றிய அறநிலையத்துறை அதிகாரிகள், 'இந்த இடம் கோவிலுக்கு சொந்தமானது' என, அறிவிப்பு பலகை வைத்து சென்றனர்.உதவி ஆணையர் சுவாமிநாதன் கூறியதாவது:ஆக்கிரமிப்பில் இருந்து வந்த பொத்தனுார் காசி விஸ்வநாதர் கோவிலுக்கு சொந்தமான நிலம், நீதிமன்ற உத்தரவுப்படி மீட்கப்-பட்டது. இதனால், ஆக்கிரமிப்பு செய்தவர்கள் மீண்டும் கோவில் நிலத்தை உரிமை கொண்டாட முடியாது. மேற்கொண்டு ஆக்கிர-மிப்பில் ஈடுபட்டால், அவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்-படும்.இவ்வாறு அவர் கூறினார்.தி.மு.க., தலைமை பொதுக்குழு உறுப்பினர் சாமிநாதன் கூறிய-தாவது:ஹிந்து சமய அறநிலையத்துறையால் கையகப்படுத்தப்பட்ட இந்த விவசாய நிலம், கடந்த, 50 ஆண்டாக நாங்கள் மற்றும் உற-வினர்கள் பயன்படுத்தி வருகிறோம். கடந்த, 1967ல் காசி விஸ்வ-நாதர் கோவில் நிர்வாகிகள் மூலம் எங்களுக்கு பத்திரம் பதியப்-பட்டுள்ளது. அதற்குரிய ஆவணங்கள் எங்களிடம் உள்ளது. ஆக்-கிரமிப்பை அகற்றுவதற்கு முன், எங்களுக்கு நோட்டீஸ் மற்றும் கால அவகாசம் வழங்கவில்லை. நீதிமன்ற தீர்ப்பு குறித்து எங்க-ளுக்கு எதுவும் தெரியாது. அதிகாரிகள், விவசாய நிலத்தில் உள்ள பொருட்களை அகற்றும்போது தான், இதுகுறித்து எங்களுக்கு தெரிய வந்தது. மேல்முறையீடு செய்ய உள்ளோம்.இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



முக்கிய வீடியோ