உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / உலக நலனுக்காக சாதுக்கள் யாத்திரை

உலக நலனுக்காக சாதுக்கள் யாத்திரை

மோகனுார்: உலக நலன் வேண்டி, மோகனுார் அசலதீபேஸ்வரர் கோவிலில், சாதுக்கள் பாதயாத்திரை நிகழ்ச்சி நடந்தது. அதில், நெரூர் ஸ்ரீசக்ர பாலா வித்யாபீடம் சாரதா அமர்நாத் சுவாமி, திருப்பராய்துறை ராமகிருஷ்ணா தபோவனம் சுவாமிகள் நியமானந்தா, சுவாமி சந்-திரசேகரானந்தா, மூத்த சாது சுவாமி சிதாபானந்தா, சுவாமி சின்ம-யானந்தா, கரூர் விவேந்தா சுவாமிகள் தலைவர் திரியம்பகேஸ்-வரா நந்தா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.முன்னதாக, கரூர் பசுபதீஸ்வரர் ஆலயத்தில், கடந்த, 3ல், துவங்-கிய இந்த பாதயாத்திரை, கருர் மின்னாம்பள்ளி, சோமூர், நெரூர், முனியப்பன், வாங்கல், மோகனுார் அசலதீபேஸ்வரர் கோவி-லுக்கு சாதுக்குள் நேற்று காலை வருகை தந்தனர். தொடர்ந்து, மூலவர் அசலதீபேஸ்வரர் முன், தமிழ் திருமுறைகள் பாடி தரி-சனம் செய்தனர். அப்போது, மூலவர் அசலதீபேஸ்வரர், தாயார் மதுக்கரவேணி அம்பாள், முருகனுக்கும் சிறப்பு அபிஷேகம், ஆராதனை நடந்தது. சிறப்பு அலங்காரத்தில் சுவாமி எழுந்தரு-ளினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ