காவலர், ஓ.ஏ., பணி எம்.பி., ஆணை வழங்கல்
நாமக்கல், நாமக்கல் கலெக்டர் அலுவலகத்தில், பணி ஆணை வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. கலெக்டர் துர்கா மூர்த்தி தலைமை வகித்தார். நாமக்கல் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி தலைவரும், எம்.பி.,யுமான ராஜேஸ்குமார், ஒன்றிய அலுவலகங்களில் பணியாற்ற பணி நியமனம் பெற்ற, 5 பேருக்கு ஆணை வழங்கினார். ஒன்றிய அலுவலகங்களில் நேரடி நியமனம் மூலம், மோகனுார் ஒன்றியத்தில், இரவு காவலர், கொல்லிமலை, புதுச்சத்திரம், சேந்தமங்கலம், பள்ளிப்பாளையம் ஒன்றியங்களில், அலுவலக உதவியாளர் என, மொத்தம், 5 பேருக்கு பணி நியமன ஆணை வழங்கப்பட்டது. மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் வடிவேல், பஞ்., உதவி இயக்குனர் பிரபாகரன், கலெக்டரின் நேர்முக உதவியாளர் லீலாகுமார் உட்பட பலர் பங்கேற்றனர்.