உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / அடுக்குமாடி குடியிருப்பு கட்ட நிலம் சர்வே மக்கள் எதிர்ப்பால் போலீசார் பேச்சுவார்த்தை

அடுக்குமாடி குடியிருப்பு கட்ட நிலம் சர்வே மக்கள் எதிர்ப்பால் போலீசார் பேச்சுவார்த்தை

பள்ளிப்பாளையம்: ஆயக்காட்டூர் பகுதியில் அடுக்குமாடி குடியிருப்பு கட்டுவதற்காக, நிலத்தை சர்வே செய்ய அதிகாரிகள் வந்தனர். அப்பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்ததால், வருவாய்த்துறை அதிகாரிகள், போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர்.பள்ளிப்பாளையம் காவிரி ஆற்றோரத்தில் வசிக்கும் மக்களுக்கு, அடுக்குமாடி குடியிருப்பு கட்ட, ஆயக்காட்டூர் பகுதியில் உள்ள இடம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. இந்த இடத்தை அதிகாரிகள், நேற்று சர்வே செய்ய வந்தனர். இதற்கு அப்பகுதி மக்கள் பலர் எதிர்ப்பு தெரிவித்தனர். இதுகு-றித்து தகவலறிந்து வந்த வருவாய்த்துறை அதிகாரிகள், பள்ளிப்-பாளையம் போலீசார், மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது, 50க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.இதுகுறித்து, பள்ளிப்பாளையம் போலீசார் கூறியதாவது:ஆயக்காட்டூர் பகுதியில் அரசு புறம்போக்கு இடம் உள்ளது. இந்த இடத்தில் நகர்புற மேம்பாட்டு வாரியம் மூலம் அடுக்குமாடி குடி-யிருப்பு வீடுகள் கட்டப்பட உள்ளது. அந்த இடத்தை, நேற்று அதிகாரிகள் சர்வே செய்ய வந்தனர். அப்போது அப்பகுதி மக்கள், 'நாங்கள், 70 ஆண்டாக அனுப-வத்தில் வைத்திருக்கிறோம்' என, தெரிவித்து எதிர்ப்பு தெரிவித்-தனர். பேச்சுவார்த்தையில், ஒருவார கால அவகாசம் கேட்டுள்-ளனர்.இவ்வாறு அவர்கள் கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை