உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / எருமப்பட்டி விவசாயிகளுக்கு மானியத்தில் விதைகள் ‍வழங்கல்

எருமப்பட்டி விவசாயிகளுக்கு மானியத்தில் விதைகள் ‍வழங்கல்

எருமப்பட்டி : மானிய விலையில் விவசாயிகளுக்கு விதை நெல் மற்றும் வேளாண் இடுபொருட்கள் வினியோகம் செய்யப்படுவதாக வேளாண்மை துறை உதவி இயக்குனர் கவிதா தெரிவித்துள்ளார். இதுகுறித்து, அவர் வெளியிட்ட அறிக்கை:எருமப்பட்டி யூனியனில் நடப்பு பருவத்திற்கு நெல், சோளம், நிலக்கடலை மற்றும் வேளாண் இடு பொருட்கள் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. எனவே, வட்டார வேளாண்மை விரிவாக்க மையத்தில் நெல் ரகங்களான வெள்ளை பொன்னி, பிபிடி 5204, ஏ.டி.டி., 54 என்ற ரக நெல் விதைகளும், நிலக்கடலை, உளுந்து உள்ளிட்ட விதை ரகங்களும், 50 சதவீத மானியத்தில் வழங்கப்பட்டு வருகிறது. மேலும், அனைத்து பயிர்களுக்கும் தேவையான நுண்ணுாட்ட கலவை, உயிர் உரங்கள் ஆகியவை, 50 சதவீத மானியத்தில் வழங்கப்பட்டு வருகிறது. விவசாயிகள் இந்த வாய்ப்பை பயன்படுத்தி கொள்ள வேண்டும்.இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



புதிய வீடியோ