உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / நாமக்கல் அரசு மகளிர் கல்லுாரியில் பொது கலந்தாய்வு

நாமக்கல் அரசு மகளிர் கல்லுாரியில் பொது கலந்தாய்வு

நாமக்கல் : அரசு மகளிர் கல்லுாரியில் நடந்த பொது கலந்தாய்வில், வணிகவியல் துறையில் உள்ள ,50 இடங்களுக்கு, 45 இடம் நிரப்பப்பட்டுள்ளது.நாமக்கல் கவிஞர் ராமலிங்கம் அரசு மகளிர் கலை கல்லுாரியில், 2024-25ம் கல்வியாண்டு இளநிலைப் பட்டப்படிப்பு மாணவியர் சேர்க்கைக்கான சிறப்பு இட ஒதுக்கீடு கலந்தாய்வு, கடந்த, 29ல் நடந்தது. மாற்றுத்திறனாளி மாணவியர், விளையாட்டு வீரர்கள், முன்னாள் ராணுவத்தினர் மகள் என, 26 பேர் சேர்க்கை பெற்றுள்ளனர். முதல் கட்ட பொது கலந்தாய்வு மாணவியர் சேர்க்கை, நேற்று துவங்கியது.இந்த பொது கலந்தாய்வு மாணவியர் சேர்க்கை, வரும், 14 வரை நடக்கிறது. நேற்று, வணிகவியல், பொருளியல் துறைக்கான மாணவியர் சேர்க்கை நடந்தது. கல்லுாரி முதல்வர் கோவிந்தராசு முன்னிலையில், பேராசிரியர்கள் அடங்கிய குழுவினர், சேர்க்கையில் ஈடுபட்டனர்.அதில், 50 இடம் நிரப்பும் வணிகவியல் துறைக்கு, 827 பேர் விண்ணப்பித்திருந்தனர். நேற்று நடந்த கலந்தாய்வில், பகல், 3:00 மணிவரை, 45 பேர் சேர்க்கை பெற்றனர். அதேபோல், 80 இடம் நிரப்பும் பொருளியல் துறைக்கு, தமிழ் வழியில், 499 பேர், ஆங்கில வழியில், 603 பேர் என, மொத்தம், 1,002 மாணவியர் விண்ணப்பித்துள்ளனர். அவர்களுக்கான சேர்க்கை நடந்து வருகிறது.இன்று வரலாறு, தமிழ், நாளை, ஆங்கிலம், கணிதம், 13ல், நுண்ணுரியியல், ஊட்டச்சத்து மற்றும் உணவு கட்டுப்பாட்டுப்பட்டியல், தாவரவியல், விலங்கியல், 14ல், கணினி அறிவியல், இயற்பியல், வேதியியல் ஆகிய பாடப்பிரிவுகளுக்கு கலந்தாய்வு நடக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



புதிய வீடியோ