விழிப்புணர்வு துண்டு பிரசுரங்கள் வெளியீடு
நாமக்கல்: பெண் குழந்தைகளை காப்போம், பெண் குழந்தைகளுக்கு கற்பிப்போம் திட்டத்தின் கீழ், விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய துண்டு பிரசுரங்கள் நேற்று வெளியிடப்பட்டது. சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை சார்பில், நாமக்கல் மாநகராட்சி திருமண மண்டபத்தில் நடந்த நிகழ்ச்சிக்கு, எம்.பி., மாதேஸ்வரன், மேயர் கலாநிதி முன்னிலை வகித்தனர். மாவட்ட கலெக்டர் உமா, விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய துண்டு பிரசுரங்களை வெளியிட்டார். துணை மேயர் பூபதி, மாநகராட்சி கமிஷனர் மகேஸ்வரி, மாவட்ட சமூக நல அலுவலர் காயத்திரி உட்பட துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.