ராசிபுரம் வித்யா மந்திர் பள்ளி மாணவர் 497 மதிப்பெண் பெற்று சிறப்பிடம்
ராசிபுரம்:ராசிபுரம் வித்யா மந்திர் பள்ளி மாணவர், 497 மதிப்பெண் பெற்று மாநில அளவில் சிறப்பிடம் பிடித்துள்ளார்.ராசிபுரம் வித்யா மந்திர் பள்ளியை சேர்ந்த, 85 மாணவ, மாண-வியர், பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதினர். இதில், அனைவரும் தேர்ச்சி பெற்றுள்ளனர். இதில் மாணவர் தரணீஷ், 497 மதிப்பெண் பெற்று பள்ளியளவில் முதலிடமும், மாநில அளவில் சிறப்பிடம் பெற்று சாதனை படைத்துள்ளார். இவர், தமிழில், 98, ஆங்கிலம், 99, கணிதம், 100, அறிவியல், 100, சமூக அறிவியல், 100 மதிப்பெண் பெற்றுள்ளார். மாணவி மிருணா, 489 மதிப்பெண் பெற்று, 2ம் இடமும், ரோஷனி, 487 மதிப்பெண் பெற்று, 3ம் இடமும் பிடித்துள்ளனர். சாதனை படைத்த மாணவ, மாணவியரை, பள்ளி தலைவர் நடராஜீ, செய-லாளர் சுந்தர் ராஜன், பொருளாளர் ராமதாஸ், சேர்மன் மாணிக்கம், துணைத்தலைவர் ராமகிருஷ்ணன், இணை செய-லாளர் பாலகிருஷ்ணன், நிறுவன தலைவர் ஆர்.எம்.கிருஷ்ணன், இயக்குனர் பெத்தண்ணன், கல்வியியல் கல்லுாரி சேர்மன் குமாரசுவாமி, ராசிபுரம் விவேகானந்தா எஜிகேஷனல் டிரஸ்ட் செயலாளர் சந்திரசேகரன், பள்ளி முதல்வர் கிருஷ்ணமூர்த்தி, பொறுப்பாசிரியர் வெண்ணிலா ஆகியோர் பாராட்டினர்.