உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / அரச மரத்தடியில் வாசிப்பு கூட்டம்

அரச மரத்தடியில் வாசிப்பு கூட்டம்

எருமப்பட்டி: எருமப்பட்டி டவுன் பஞ்., அரசு ஆண்கள் மேல்நி-லைப்பள்ளியில், 500க்கும் மேற்பட்ட மாண-வர்கள் படித்து வருகின்றனர். இப்பள்ளியில் மாதந்தோறும் அரச மரத்தடி மாணவர் வாசிப்பு வட்ட கூட்டம் நடந்து வருகிறது. இதேபோல், நேற்று நடந்த மாணவர்கள் வாசிப்பு வட்ட கூட்டத்தில் மாணவர் பரசுராம், சஞ்சய் ஆகியோர் கலந்துகொண்டு, வண்ணதாசன் சிறுக-தைகள் மற்றும் சுனிதா வில்லியம்ஸ் ஆகி-யோரின் சாதனை நுால்களை ஆய்வு செய்து மாணவர்களுக்கு விளக்கினர். தலைமை ஆசி-ரியர் தமிழ்செல்வன் தலைமை வகித்தார். மாணவர் கிரிபாலா, விஜய், ஜீவாகனி ஆகியோர் வரவேற்றனர். 40க்கும் மேற்பட்ட மாணவர்கள் அரச மரத்தடியில் அமர்ந்து நுால்களை வாசித்-தனர். தமிழாசிரியர் செந்தில்குமார் ஏற்பாடு செய்-திருந்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



புதிய வீடியோ