மேலும் செய்திகள்
கடலுார் சி.கே.,பள்ளி மாணவர்கள் சாதனை
17-May-2025
குமாரபாளையம்: பத்தாம் வகுப்பு தேர்வில், குமார பாளையம் ரிலையன்ஸ் மெட்ரிக் பள்ளி மாணவர்கள், 100 சதவீதம் தேர்ச்சி பெற்று சாதனை படைத்தனர். மாணவி கனிஷ்கா, 500க்கு, 491 மதிப்பெண் பெற்று பள்ளியில் முதலிடம் பிடித்தார். மாணவர் வாஜேஷ், 490 மதிப்பெண் பெற்று, இரண்டாம் இடம்; மாணவி ஸ்ரீவர்சினி, 488 மதிப்பெண் பெற்று, மூன்றாம் இடம் பிடித்தனர்.அறிவியல் பாடத்தில், மூன்று மாணவர்கள், சமூக அறிவியலில், ஐந்து மாணவர்கள், 100க்கு, ௧௦௦ மதிப்பெண் பெற்று சாதனை படைத்தனர். மாணவர்களையும், உறுதுணையாக இருந்த ஆசிரியர்களையும், தாளாளர் ராமசாமி, செயலர் கோமதி வெங்கடாசலம், பொருளாளர் கந்தசாமி, அனைத்து இயக்குனர்கள், முதல்வர் பிரின்சி மெர்லின் ஆகியோர் வாழ்த்தினர்.
17-May-2025