உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / விசா காலாவதியான இலங்கை தமிழர்கள் தொடர்ந்து வசிக்க அனுமதிக்க கோரிக்கை

விசா காலாவதியான இலங்கை தமிழர்கள் தொடர்ந்து வசிக்க அனுமதிக்க கோரிக்கை

நாமக்கல், 'விசா' காலம் முடிவடைந்தும், தமிழகத்திலேயே தங்கியுள்ள இலங்கை தமிழர்கள், தொடர்ந்து இங்கேயே தங்குவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்' என, தமிழக முதல்வருக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.இதுகுறித்து, நாமக்கல் மாவட்டம், பரமத்தியில் உள்ள இலங்கை தமிழர் முகாமில் வசித்து வருபவர்கள், கலெக்டரிடம் அளித்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:தமிழகம் முழுவதும் வசிக்கும் இலங்கை தமிழர்களின், 'விசா' காலம் முடிவடைந்தவர்கள், வரும், 10ம் தேதிக்குள் நாட்டைவிட்டு வெளியறுமாறு போலீசார் கூறியுள்ளனர். இலங்கையில் உள்நாட்டு போர் நடந்தபோது, தப்பி வந்த நாங்கள், நாமக்கல் மாவட்டம், பரமத்தியில் உள்ள இலங்கை தமிழர் முகாமில், 1990 முதல், 2011 வரை தங்கி வசித்து வருகிறோம். அதன்பின், இலங்கையில் உள்நாட்டு போர் முடிந்தவுடன், சிலர் இலங்கைக்கு திரும்பினர். மீண்டும் அங்கு சாதகமற்ற நிலை ஏற்பட்டதால், இலங்கை பாஸ்போர்ட் மற்றும் இந்திய, 'விசா' பெற்று, தமிழகத்தில் வசித்து வருகிறோம்.நாங்கள் பெற்ற இந்திய, 'விசா' ஏற்கனவே காலாவதியாகவிட்டது. இங்கு வசிக்கும் பெரும்பாலானோர், தமிழக வம்சாவளியை சேர்ந்தவர்கள். பூர்வீக தமிழ் குடிமக்கள். நாங்கள் தொடர்ந்து இங்கேயே வாழ்ந்து, இந்திய குடியுரிமை பெற விரும்புகிறோம். அதற்காக தேவையான ஆவணங்களையும் அதிகாரிகளிடம் சமர்ப்பித்துள்ளோம். நாங்கள் இலங்கை செல்ல விரும்பவில்லை. இப்பிரச்னையில், தமிழக முதல்வர் உடனடியாக தலையிட்டு, நாங்கள் தொடர்ந்து இங்கேயே தங்குவதற்கும், இந்திய குடியுரிமை வழங்குவதற்கும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

sethusubramaniam
மே 13, 2025 08:53

ஒண்ணா சீமான் மூலம் கோரிக்கை கொடுங்கள். அல்லது திமுகாவுக்குத்தான் ஒட்டு போடுவோம்னு வாக்குறுதி கொடுங்கள். இங்கேயே தங்கிடலாம். உங்களில் இஸ்லாமியர் இருந்தால் முதன்மை கொடுக்கப்படும்,


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை