மேலும் செய்திகள்
தி.மு.க., பேனர் கிழிப்பு
28-Sep-2025
குமாரபாளையம்: குமாரபாளையத்தில், நகராட்சி சார்பில் சிறுவர் பூங்கா அமைக்க கோரிக்கை மனு அளிக்கப்பட்டது.குமாரபாளையம் போலீஸ் ஸ்டேஷன் பின்புறம் பழைய சார்பதி-வாளர் அலுவலகம் உள்ளது. இது மிகவும் சேதமான நிலையில் உள்ளதால், செடி, கொடிகள் வளர்ந்து, சுவற்றை துளைத்து கொண்டுள்ளது. இதனால் கட்டடம் மேலும் சேதமாகும் நிலை உள்ளது. இதனால் தேள், பாம்பு உள்ளிட்ட விஷ ஜந்துக்கள் அருகில் உள்ள குடியிருப்பு பகுதிக்குள் நுழைந்து விடுவதால், பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர். செடி, கொடிகளை வெட்டி விட்டு ஆசிட் ஊற்ற வேண்டும். மேலும் இதன் அருகில் உள்ள, காலி இடத்தில் குப்பை கொட்டப்பட்டு வருகிறது. இதனால் துர்-நாற்றம் வீசுவதுடன், கொசு உற்பத்தியும் அதிகமாகி, பல்வேறு நோய்கள் பரவ காரணமாகிறது. அந்த இடத்தை துாய்மைப்ப-டுத்தி, அப்பகுதி சிறுவர், சிறுமியர் விளையாட, பொழுது போக்கு பூங்கா அமைத்து தர வேண்டும் என அப்பகுதி பொது-மக்கள் நகராட்சி அலுவலகத்தில், மனு அளித்தனர்.
28-Sep-2025