உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / பிடிபட்ட மலைப்பாம்பு காப்பு காட்டில் விடுவிப்பு

பிடிபட்ட மலைப்பாம்பு காப்பு காட்டில் விடுவிப்பு

சேந்தமங்கலம்: கொல்லிமலை அடிவாரம், காரவள்ளி பாக்கு தோப்பில் இருந்த மலைப்பாம்பை, வனத்துறையினர் மீட்டு காப்பு காட்டில் விடு-வித்தனர்.கொல்லிமலை அடிவாரம் காரவள்ளி உள்ளிட்ட பகுதிகளில், அதிகளவில் பாக்கு மரங்கள் உள்ளது. இங்கு புளியங்காடு என்ற இடத்தில் உள்ள பாக்கு தோப்பில், மலைப்பாம்பு ஒன்று இரை தின்ற நிலையில் செல்ல முடியாமல் படுத்திருந்தது.அப்போது, வேலைக்கு சென்ற கூலி தொழிலாளர்கள் மலைப்-பாம்பு உள்ளதை பார்த்து ஓட்டம் பிடித்தனர். இதையடுத்து, சேந்-தமங்கலம் வனக்காப்பாளர் நந்தகுமார் மற்றும் வனத்துறையினர் மரத்தில் சுத்தி இருந்த, 20 அடி நீளம் உள்ள மலைப்பாம்பை பிடித்தனர். பின்னர், மலைப்பாம்பை கொல்லிமலை காப்பு காட்டில் விடுவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி