மேலும் செய்திகள்
தகவல் அறியும் உரிமை சட்ட விழிப்புணர்வு
16-Oct-2024
தகவல் அறியும் உரிமைச்சட்டம்விழிப்புணர்வு ஏற்படுத்திய போலீஸ்ராசிபுரம், அக். 19-ராசிபுரம் போலீஸ் சார்பில் தகவல் பெறும் உரிமை சட்டம் 2005 குறித்து விழிப்புணர்வு வாரம் கடைபிடிக்கப்படுகிறது. பொது இடங்கள், அரசு பள்ளி கல்லூரி உள்ளிட்ட கல்வி நிறுவனங்கள் என மக்கள் கூடும் இடங்களில் சட்டம் குறித்து விளக்கமளித்து வருகின்றனர். நேற்று அண்ணாசாலை அரசு பள்ளி அருகே போலீசார் சார்பில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. எஸ்.ஐ., சுரேஷ், எஸ்.எஸ்.ஐ., ஜெயக்குமார் உள்ளிட்ட போலீசார் கலந்து கொண்டனர். அங்கிருந்த பொதுமக்கள், மாணவர்களிடம் தகவல் அறியும் உரிமை சட்டத்தில் எவ்வாறு விண்ணப்பிப்பது, மேல் முறையீடு செய்வது உள்ளிட்டவை குறித்து விளக்கமாக கூறினர்.
16-Oct-2024