உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / பாலத்தில் வளரும் செடிகளால் உறுதித்தன்மை பாதிக்கும் அபாயம்

பாலத்தில் வளரும் செடிகளால் உறுதித்தன்மை பாதிக்கும் அபாயம்

குமாரபாளையம்: குமாரபாளையம் காவிரி ஆற்றின் குறுக்கே, பழைய காவிரி பாலம் ஆங்கிலேயர் காலத்தில் கட்டப்பட்டது. மிகவும் பழுதடைந்ததால், 15 ஆண்டுகளுக்கு மேலாக, கனரக வாகனங்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. டூவீலர், கார், ஆட்டோக்கள் மட்டும் அனுமதிக்கப்படுகிறது. இதில், பக்கவாட்டு சுவர்கள் சில மாதங்களுக்கு முன் பராமரிப்பு பனி செய்யப்பட்டது.தற்போது, இந்த பாலத்தின் பக்கவாட்டு சுவரில், வேம்பு, அரச மரங்கள் வளர்ந்து வருகின்றன. நாளாக, நாளாக இந்த மரங்கள் பெரிதாகி வருகிறது. ஏற்கனவே பலவீனமாக இருக்கும் இந்த பாலத்தில், மரத்தின் வேர்கள் ஊடுருவினால், பாலத்தின் உறுதித்தன்மை மேலும் பாதிக்கும் அபாயம் உள்ளது. அசம்பாவிதம் ஏற்படும் முன், பாலத்தில் வளர்ந்துள்ள மரக்கன்றுகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், இந்த பாலத்தில், குமாரபாளையம் பகுதியில் இருந்து பவானி செல்லும் வழியில், மின்வாரியம் சார்பில் புதைவட கேபிள்கள் அமைக்கும் பணிக்காக கொண்டுவரப்பட்ட மர உருளைகள் வைக்கப்பட்டுள்ளன. இது, பொதுமக்கள் செல்லபெரும் இடையூறாக உள்ளது. இதனை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை