உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / 79 குடும்பங்களுக்கு ரூ.7.9 லட்சம் உதவி

79 குடும்பங்களுக்கு ரூ.7.9 லட்சம் உதவி

ராசிபுரம், புதுச்சத்திரம் வடக்கு, தெற்கு ஒன்றியங்களை சேர்ந்த, தி.மு.க., நிர்வாகிகளில், கடந்த சில மாதங்களில் இறந்த நிர்வாகி குடும்பங்களுக்கு ஆறுதல் மற்றும் நிதியுதவி வழங்கும் விழா, நேற்று நடந்தது. புதுச்சத்திரம் வடக்கில், 35 குடும்பங்கள், புதுச்சத்திரம் தெற்கில், 44 குடும்பங்கள் என மொத்தம், 79 குடும்பங்களுக்கு, கலைஞர் குடும்ப நல நிதி வழங்கப்பட்டது. விழாவில், மாவட்ட செயலாளர் ராஜேஸ்குமார் எம்.பி., கலந்துகொண்டு, ஒவ்வொரு குடும்பத்திற்கும், தலா, 10,000 ரூபாய் வழங்கினார்.முன்னதாக இறந்த நிர்வாகிகளின் படங்களை வைத்து, விளக்கேற்றி மலர் துாவி அஞ்சலி செலுத்தினர். இதில், நாமக்கல் எம்.எல்.ஏ., ராமலிங்கம் முன்னிலை வகித்தார். புதுச்சத்திரம் வடக்கு ஒன்றிய செயலாளர் கவுதம், புதுச்சத்திரம் தெற்கு ஒன்றிய பொறுப்பாளர் ஜெயபிரகாஷ், மாநில இளைஞரணி துணை செயலாளர் ஆனந்தகுமார், சார்பு அணி நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.வரத்து சரிந்ததால்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை