உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / கடைகளில் திருடியவர் கைது

கடைகளில் திருடியவர் கைது

ப.வேலுார், ப.வேலுார் பகுதிகளில் கடையின் பூட்டை உடைத்து, 5,500 மற்றும் 20,000 ரூபாயை, மர்ம நபர்கள் திருடி சென்றனர். பரமத்தி போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். நேற்று முன்தினம் மாலை ப.வேலுார் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது டூவீலரில் வந்தவரை பிடித்து விசாரித்தனர்.அதில், விருதுநகரை சேர்ந்த கிருஷ்ணன் மகன் தமிழரசன், 41, என்பதும்; ப.வேலுார், பரமத்தியில் கடைகளின் பூட்டை உடைத்து பணத்தை திருடிச்சென்றதும் தெரிய வந்தது. இதையடுத்து போலீசார், தமிழரசனை கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை