மின்வாரியம் சார்பில் சோலார் இணைப்பு முகாம்
பள்ளிப்பாளையம், தமிழ்நாடு மின் பகிர்மான கழகம், பள்ளிப்பாளையம் கோட்டம் சார்பில், பள்ளிப்பாளையம் அருகே, ஆவாரங்காடு பகுதியில் உள்ள நகராட்சி மண்டபத்தில், பிரதம மந்திரி சோலார் மின் திட்ட முகாம், நேற்று, கரூர் மண்டல தலைமை பொறியாளர் அசோக்குமார், பள்ளிப்பாளையம் செயற்பொறியாளர் செல்வம் தலைமையில் நடந்தது. நகராட்சி தலைவர் செல்வராஜ், சோலார் முகமை துவக்கி வைத்தார். இதில், அங்கீகரிக்கப்பட்ட சோலார் பேனல் விற்பனையாளர்கள், வங்கி அதிகாரிகள் மின்வாரிய அதிகாரிகள் கலந்துகொண்டு பொதுமக்களுக்கு தேவையான விபரங்களை வழங்கினர். 200க்கு மேற்பட்டோர் கலந்துகொண்டு பயனடைந்தனர்.