உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / தேய்பிறை அஷ்டமி சிறப்பு வழிபாடு

தேய்பிறை அஷ்டமி சிறப்பு வழிபாடு

மல்லசமுத்திரம்:ஆவணி மாத தேய்பிறை அஷ்டமியையொட்டி, மல்லசமுத்திரம் அருகே, மோர்பாளையத்தில் பழமை வாய்ந்த பைரவநாத மூர்த்தி கோவிலில், நேற்று மதியம், 12:00மணிக்கு பைரவநாத மூர்த்திக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனை நடந்தது. பக்தர்கள் வெண் பூசணியில் தீபம் ஏற்றி சிறப்பு வழிபாடு செய்தனர்.தொடர்ந்து, உற்சவமூர்த்தி கோவிலை சுற்றி வலம் வந்தார். பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். பக்தர்களுக்கு அன்னதானம், பிரசாதம் வழங்கப்பட்டது.* சேந்தமங்கலம் சவுந்தரவள்ளி அம்பாள் சமேத சோமேஸ்வரர் கோவிலில் உள்ள பைரவருக்கு, பல்வேறு வாசனை திரவியங்களை கொண்டு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு, வெள்ளி கவச அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். தீபாராதனை முடிந்து பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை