கல்லுாரி மாணவர்களுக்கு வரும் 17-ல் பேச்சு போட்டி
நாமக்கல்: நாமக்கல் கலெக்டர் உமா வெளியிட்ட அறிக்கை: நாமக்கல் மாவட்ட தமிழ் வளர்ச்சித்துறை சார்பில், நாமக்கல் கவிஞர் ராம-லிங்கம் அரசு மகளிர் கலை கல்லுாரியில், வரும், 17 ல் மகாத்மா காந்தி, ஜவஹர்லால் நேரு பிறந்த நாள் பேச்சு போட்டி நடக்கி-றது. காலை, 9:30 முதல், மதியம், 1:00 மணி வரை, காந்தியடிகள் தலைப்பிலும், மதியம், 2:00 முதல் மாலை, 5:30 மணி வரை ஜவ-ஹர்லால் நேரு தலைப்பிலும் போட்டி நடக்கிறது. இதில், அரசு, தனியார் கல்லுாரி மாணவ, மாணவியர் பங்கேற்கலாம். வெற்றி பெறும் மாணவ, மாணவியருக்கு, மாவட்ட அளவில் முதல் பரிசு, 5,000 ரூபாய், 2ம் பரிசு, 3,000 ரூபாய், 3ம் பரிசு, 2,000 ரூபாய் வழங்கப்படும்.விடுதலை இந்தியாவின் வித்தகர், அயலகத்தில் அண்ணல் காந்தி, நாடு போற்றும்- நற்சிந்தனையாளர் காந்தியடிகள், பண்டிதர் நேருவின் கடிதங்கள், ஜவஹர்லால் நேருவின் அரசியல் கொள்-கைகள், டிஸ்கவரி ஆப் இந்தியா போன்ற தலைப்புகளில் திறமை-களை வெளிப்படுத்தலாம். கல்லுாரி முதல்வரின் அனுமதியுடன், கல்லுாரி கல்வி இணை இயக்குனர் வழியாக இப்போட்டிகளில் மாணவ, மாணவியர் பங்கேற்கலாம்.விபரங்களுக்கு, மாவட்ட கலெக்டர் அலுவலக வளாக கூடுதல் கட்டடத்திலுள்ள தமிழ் வளர்ச்சி உதவி இயக்குனர் அலுவல-கத்தை, 04286-292164 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.