உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / சீனிவாச கல்யாண வைபவம்

சீனிவாச கல்யாண வைபவம்

மோகனுார்: மோகனுார் காவிரி ஆற்றங்கரையில், பிரசித்தி பெற்ற கல்யாண பிரசன்ன வெங்கட் ரமண பெருமாள் சுவாமி கோவில் உள்ளது. இங்கு சுவாமி, பத்மாவதி தாயார் சமேதராக எழுந்தருளி பக்தர்க-ளுக்கு அருள்பாலிக்கின்றார். இக்கோவிலில், நேற்று சீனிவாச கல்-யாண வைபவம் சிறப்பாக நடந்தது. விழாவை முன்னிட்டு, காலை, 6:00 மணிக்கு விஸ்வரூப தரிசனம், 7:30 மணிக்கு, மூலவர் வெங்கடாஜலபதி அலங்காரம் செய்யப்பட்டு, விசேஷ ஆராதனை, தீபாராதனை நடந்தது.மாலை, 5:30 மணிக்கு, சீனிவாச கல்யாணம் கோலாகலமாக நடந்தது. இரவு, 8:30 மணிக்கு, தீபாராதனை சுவாமி உட்பிரகார புறப்பாடும் நடந்தது. பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. தொடர்ந்து, பள்ளியறை சேவையும் நடந்தது. சுற்று வட்டாரத்தை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் சுவாமியை வழிபட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ