உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / மாணவிக்கு பாலியல் தொல்லை கைதான எஸ்.எஸ்.ஐ., சஸ்பெண்ட்

மாணவிக்கு பாலியல் தொல்லை கைதான எஸ்.எஸ்.ஐ., சஸ்பெண்ட்

நாமக்கல், மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் கைதான, கொல்லிமலை வாழவந்திநாடு போலீஸ் எஸ்.எஸ்.ஐ.,யை சஸ்பெண்ட் செய்து, நாமக்கல் எஸ்.பி., விமலா உத்தரவிட்டார்.நாமக்கல் மாவட்டம், நாமகிரிப்பேட்டை அடுத்த ஆயில்பட்டியை சேர்ந்தவர் மோகன், 54; கொல்லிமலை, வாழவந்திநாடு போலீஸ் ஸ்டேஷனில் எஸ்.எஸ்.ஐ., இவருக்கு மனைவி, இரண்டு மகன்கள் உள்ளனர். வாழவந்திநாடு போலீசாருக்கு, கொல்லிமலையை சேர்ந்த ஒருவர் சமையல் செய்து கொடுத்து வருகிறார்.சமையலரின், 19 வயது மகள், திண்டுக்கல் தனியார் கல்லுாரியில், இரண்டாமாண்டு பி.எஸ்சி., படித்து வருகிறார். கடந்த, 6ல், திண்டுக்கல் செல்வதற்காக புறப்பட்ட மாணவி மற்றும் அவரது தந்தை ஆகிய இருவரையும், எஸ்.எஸ்.ஐ., மோகன், தன் காரில் அழைத்து சென்றுள்ளார். அப்போது, முள்ளுக்குறிச்சியில் மாணவியின் தந்தை இறங்கிய நிலையில், தனியாக இருந்த மாணவியிடம், எஸ்.எஸ்.ஐ., மோகன் பாலியல் சீண்டலில் ஈடுபட்டுள்ளார்.அதிர்ச்சியடைந்த மாணவி, கடந்த, 11ல், நாமக்கல் அனைத்து மகளிர் போலீஸ் ஸ்டேஷனில் அளித்த புகார்படி, இன்ஸ்பெக்டர் வேதபிறவி, பாலியல் சீண்டலில் ஈடுபட்ட எஸ்.எஸ்.ஐ., மோகனை கைது செய்தார். இந்நிலையில், மோகனை, நாமக்கல் எஸ்.பி., விமலா 'சஸ்பெண்ட்' செய்து உத்தரவிட்டார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி