உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / மாணவன் உயிரிழப்பு; சக மாணவன் கைது

மாணவன் உயிரிழப்பு; சக மாணவன் கைது

ராசிபுரம்: நாமக்கல் மாவட்டம், ராசிபுரம் எல்.ஐ.சி., காலனியை சேர்ந்த பிரகாஷ் மகன் கவின்ராஜ், 14. இவர், புதுப்பாளையத்தில் உள்ள சிவானந்தா சாலை அரசு மேல்நிலைப்பள்ளியில், 9ம் வகுப்பு படித்து வந்தார். இந்நிலையில், நேற்று முன்தினம் காலை, பள்ளி கழிவறையில் கவின்ராஜ் உயிரிழந்து கிடந்தார். அதிர்ச்சியடைந்த பெற்றோர், உறவினர்கள் கவின்ராஜை அடித்து கொலை செய்தவர்களை கைது செய்ய வேண்டும் என, சாலை மறியலில் ஈடுபட்டனர்.இதுகுறித்து ராசிபுரம் போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். அதில், உடன் படிக்கும் சக மாணவன், கவின்ராஜை அடித்து கொலை செய்தது தெரியவந்தது. இதையடுத்து, இறப்புக்கு காரணமான, 9ம் வகுப்பு மாணவனை கைது செய்த போலீசார், சேலம் சிறார் சிறையில் அடைத்தனர். கவின்ராஜ் உடலை, நேற்று இரவு அவரது உறவினர்களிடம் ஒப்படைத்தனர். இறந்த மாணவன் குடும்பத்திற்கு, இலவச வீட்டுமனை பட்ட வழங்கப்பட்டது. மற்ற கோரிக்கைகளை அரசிடம் சொல்லி நிறைவேற்றி தருவதாக உறுதியளித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி