உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / அறிவுரை கூறியதால் மாணவி விபரீத முடிவு

அறிவுரை கூறியதால் மாணவி விபரீத முடிவு

நாமக்கல்,:சேலம் குகையை சேர்ந்த தியாகராஜன், பரிமளா தம்பதியர். இவர்களது மகள் ஜோதிஸ்ரீ, 17, மகன் புகழேந்தியுடன், நாமக்கல்-சேலம் சாலை பொதிகை நகரில் வாடகை வீட்டில் வசித்து வருகின்றனர். பரிமளா தனியார் மருத்துவமனையில் துப்புரவு பணியாளராக பணியாற்றி வருகிறார். மகள் ஜோதிஸ்ரீ, தனியார் பாலிடெக்னிக் கல்லுாரியில், இரண்டாம் ஆண்டு படித்து வந்தார். அவர் சரியாக படிக்காததால், பரிமளா அறிவுரை கூறியுள்ளார்.இதனால் மனமுடைந்த ஜோதிஸ்ரீ, நேற்று முன்தினம் மாலை, 4:00 மணிக்கு, துாக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். அக்கம் பக்கத்தினர் மாணவியை மீட்டு, நாமக்கல் அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு பரிசோதனை செய்த டாக்டர்கள், அவர் இறந்துவிட்டதாக தெரிவித்தனர். சம்பவம் தொடர்பாக, நாமக்கல் போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ