உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / சேதமடைந்த வாழை கணக்கெடுப்பு பணி

சேதமடைந்த வாழை கணக்கெடுப்பு பணி

பள்ளிப்பாளையம்: பள்ளிப்பாளையம் அருகே, சமயசங்கிலி, கரமேடு, தொட்டிப்பாளையம், செங்குட்பாளையம் உள்ளிட்ட சுற்று வட்டார பகுதி விவசாயம் நிறைந்த பகுதியாகும். இப்பகுதியை சேர்ந்த ஏராளமான விவசாயிகள், வாழை சாகுபடி செய்திருந்தனர். சாகுபடி செய்த வாழை, இன்னும் மூன்று மாதத்தில் அறுவடைக்கு தயாராகும் நிலையில் இருந்தது. இந்நிலையில், சில நாட்களாக காற்றுடன் தொடர்ந்து மழை பெய்து வந்தது. இதனால் பல்வேறு பகுதிகளில் வாழை மரங்கள் சாய்ந்து சேதமாகின. கடந்த இரண்டு நாட்களாக, பள்ளிப்பாளையம் வட்டார தோட்டக்கலை அதிகாரிகள் சமயசங்கிலி சுற்று வட்டார பகுதியில் சேதமடைந்த வாழை சாகுபடி குறித்து கணக்கெடுத்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி