சேந்தமங்கலம் : சேந்தமங்கலம், காந்திபுரம் அண்ணா நகரை சேர்ந்தவர் பணரோசா, 46. இவர், நைனாமலை ரோடு சாலையூரில் உள்ள டாஸ்மாக் கடையில் பணியாற்றி வந்தார். கடந்த, 26ல் அதே கடையில் பணியாற்றி வரும் உதயகுமார், 45, கோகிலன், 43, உள்ளிட்ட, 4 பேருடன் டூவீலரில் சேந்தமங்கலத்திற்கு சென்று கொண்டிருந்தார்.அப்போது, 3 டூவீலர்களில் வந்த மர்ம நபர்கள், பணரோசாவின் கையை வெட்டினர். குற்றவாளிகளை பிடிக்க, டி.எஸ்.பி., ஆனந்த்ராஜ் தலைமையில், 6 தனிப்படை அமைக்கப்பட்டு, அவர்களை தேடி வந்தனர். இந்நிலையில், கூலிப்படையை சேர்ந்த தினேஷ்குமார், ஸ்டாலின், நிவாஸ்பாஷா, கணேசன், மோகன், கோகுல், உள்ளிட்டோரை, சில நாட்களுக்கு முன் போலீசார் கைது செய்து விசாரித்து வந்தனர்.இந்நிலையில், தினேஷ்குமார், ஸ்டாலின், நிவாஸ்பாஷா உள்ளிட்டோரை, நேற்று முன்தினம் இரவு கைது செய்து சிறையில் அடைத்தனர். மேலும், கணேசன், 21, உடல் நிலை சரியில்லாத காரணத்தால், நாமக்கல் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்க்கப்பட்டுள்ளார். மேலும், மோகன், கோகுல் ஆகிய, 2 பேரிடம் போலீசார் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.