உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / மகாவீர் ஜெயந்தி, மே தினத்தில் டாஸ்மாக் கடையை மூட உத்தரவு

மகாவீர் ஜெயந்தி, மே தினத்தில் டாஸ்மாக் கடையை மூட உத்தரவு

நாமக்கல்:'வரும், 21ல் -மகாவீர் ஜெயந்தி, மே, 1ல் உழைப்பாளர் தினம் ஆகியவற்றை முன்னிட்டு, மாவட்டத்தில் உள்ள டாஸ்மாக் கடைகளை மூட வேண்டும்' என, நாமக்கல் கலெக்டர் உமா தெரிவித்துள்ளார்.இதுகுறித்து, அவர் வெளியிட்ட அறிக்கை: வரும், 21ல் மகாவீர் ஜெயந்தி, மே, 1ல் உழைப்பாளர் தினத்தை முன்னிட்டு அன்றைய தினம், இந்திய தயாரிப்பு அயல்நாட்டு மதுபான சில்லறை விற்பனை கடைகள் மற்றும் உரிமம் பெற்ற மதுக்கூடங்கள் மூட வேண்டும் என, தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்படி, வரும், 21ல் மகாவீர் ஜெயந்தி, மே, 1ல் உழைப்பாளர் தினம் ஆகிய தினத்தையொட்டி, நாமக்கல் மாவட்டத்தில் உள்ள அனைத்து இந்திய தயாரிப்பு அயல்நாட்டு மதுபான சில்லறை விற்பனை கடைகள், மதுக்கூடங்கள் உரிம வளாகங்களை மூட வேண்டும். அவற்றை மீறி, டாஸ்மாக கடைகள், உரிம வளாகங்களை திறந்தாலோ, மறைமுகமாக விற்பனை செய்தாலோ சம்பந்தப்பட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை