உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / தர ஊதியம் குறைப்பு; ஆசிரியர்கள் முறையீடு

தர ஊதியம் குறைப்பு; ஆசிரியர்கள் முறையீடு

நாமக்கல்,தொடக்கப்பள்ளி ஆசிரியர்களுக்கு தர ஊதியம் குறைக்கப்பட்டதற்கு எதிராக மாவட்ட கல்வி அலுவலகத்தில் முறையீடு செய்யப்பட்டது. தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்ற மாநில பொருளாளர் முருக.செல்வராசன் தலைமையில், நாமக்கல் மாவட்ட செயலாளர் சங்கர் மற்றும் நிர்வாகிகள், ஆசிரியர்கள் தரப்பில், நேற்று முறையீட்டு மனு அளிக்கப்பட்டது. இதில், தர ஊதிய குறைப்பை கட்டாயப்படுத்தி திணித்து, அரசுக்கு களங்கம் ஏற்படுத்தும் நடவடிக்கைகளை, தமிழ்நாடு தொடக்கக்கல்வித் துறை முற்றிலுமாக கைவிட வேண்டும் என்பன உள்ளிட்ட, ஐந்து அம்ச கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தப்பட்டது. மேலும், வரும், 22ல் மாவட்ட முதன்மை கல்வி அலுவலகம் முன் தொடர் உண்ணாவிரதம் மேற்கொள்ள இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



சமீபத்திய செய்தி