உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / அத்தனுார் அம்மன் கோவிலில் வரும் 26ல் தேர்த்திருவிழா

அத்தனுார் அம்மன் கோவிலில் வரும் 26ல் தேர்த்திருவிழா

வெண்ணந்துார்: வெண்ணந்துார் அடுத்த சேலம்-நாமக்கல் தேசிய நெடுஞ்சாலை அருகே அத்தனுார் அம்மன் கோவில் அமைந்துள்ளது. இங்கு, சித்திரை தேர்திருவிழா, நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. அதை தொடர்ந்து, நேற்று, குதிரை வாகனம், இன்று, சிம்ம வாகனம், நாளை, காமதேனு வாகனம், 23ல் பூத வாகனம், 24ல் பல்லாக்கு வாகனம், 25ல் அன்ன வாகனம் என, நாள்தோறும் பல்வேறு வாகனங்களில் அம்மன் திருவீதி உலா நடக்கிறது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம், 26ல் நடக்கிறது. விழா ஏற்பாடுகளை, கோவில் செயல் அலுவலர் சிவகாமி செய்து வருகிறார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை