உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / தொண்டர்களை துாண்டிவிட்டால் காங்., புத்துணர்ச்சி பெறும்

தொண்டர்களை துாண்டிவிட்டால் காங்., புத்துணர்ச்சி பெறும்

நாமக்கல், கிழக்கு மாவட்ட காங்., சார்பில், 'அமைப்பு மறுசீரமைப்பு இயக்கத்தின்' ஆலோசனை கூட்டம், நாமக்கல்லில் நடந்தது. மாவட்ட தலைவர் சித்திக் தலைமை வகித்தார். ஓ.பி.சி., பிரிவு மாநில தலைவர் செந்தில், முன்னாள் மாவட்ட தலைவர் ஷேக்நவீத் ஆகியோர் முன்னிலை வகித்தனர். அகில இந்திய ஆதிவாசி காங்., துணைத்தலைவரும், நாமக்கல் மாவட்ட காங்., பொறுப்பாளருமான பெல்லையா நாயக், தமிழக காங்., கட்சியின் பார்வையாளர் விக்டரி மோகன் ஆகியோர் கலந்து கொண்டனர்.அப்போது, தமிழக பார்வையாளர் விக்டரி மோகன் பேசியதாவது:ஒவ்வொரு கிராமங்களுக்கும் சென்று காங்., கட்சியை வளர்க்க வேண்டும். கிராமத்தில் உள்ள காங்., கமிட்டியை யாரும் மதிப்பதில்லை. ஒரு காலத்தில், பெட்ரோமாக்ஸ் லைட்டை கொண்டு சென்று கிராமத்தில், காங்., கட்சியை வளர்த்தோம் என்பது வரலாறு. அவற்றை மீண்டும் துவங்க வேண்டும். அடிமட்ட தொண்டர்களை துாண்டிவிட்டால் போதும், கட்சியினர் புத்துணர்ச்சி பெறுவர். இவ்வாறு அவர் பேசினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



சமீபத்திய செய்தி