உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / புதிய பஸ் ஸ்டாண்டில் இருந்து நாமக்கல் நகரின் கட்டண நிலையை அறிவிக்கணும்: ஜனதா கட்சி

புதிய பஸ் ஸ்டாண்டில் இருந்து நாமக்கல் நகரின் கட்டண நிலையை அறிவிக்கணும்: ஜனதா கட்சி

நாமக்கல், டிச. 18-நாமக்கல், முதலைப்பட்டியில், 12.90 ஏக்கர் நிலத்தில், அக்., 22ல் முதல்வர் ஸ்டாலின், புதிய பஸ் ஸ்டாண்டை திறந்து வைத்தார். புதிய பஸ் ஸ்டாண்ட் பயன்பாட்டுக்கு வருவதற்கு முன், சேலத்தில் இருந்து நாமக்கல், திருச்சி, கரூர் செல்லும் பஸ்கள், நாமக்கல் வருவதற்கு கட்டணமாக, அரசு மப்சல் பஸ்சில், 45 ரூபாய், தனியார் பஸ்சில், 36 ரூபாய் பயணிகளிடம் வசூலிக்கப்பட்டது.அதேபோல், சேலம் சீலநாயக்கன்பட்டி புறவழிச்சாலையில் இருந்து, நாமக்கல் செல்ல, 'மப்சல்' பஸ்சில், 40 ரூபாய், தனியார் பஸ்சில், 31 ரூபாய் கட்டணம் வசூலிக்கப்பட்டது. தற்போது, புதிய பஸ் ஸ்டாண்ட் திறந்த பின், சேலத்தில் இருந்து நாமக்கல் புதிய பஸ் ஸ்டாண்ட் வரும் பஸ்களில், அதே கட்டணம் வசூலிக்கப்படுகிறது. அங்கிருந்து, பழைய பஸ் ஸ்டாண்டிற்கு செல்ல, மப்சல் பஸ்சில், 10 ரூபாய், டவுன் பஸ்சில், 7 ரூபாய் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இரண்டு கட்டணம் வசூலிப்பதால், பயணிகள் அதிருப்தியடைந்துள்ளனர். அதனால், கிலோ மீட்டரை கணக்கிட்டு கட்டணம் வசூல் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது.இந்நிலையில், ஜனதா கட்சி நாமக்கல் மாவட்ட தலைவர் பழனியப்பன், பொதுச்செயலாளர் சுரேஷ்குமார் ஆகியோர், நாமக்கல் கலெக்டர், மாவட்ட போக்குவரத்து அதிகாரிகளிடம் மனு அளித்துள்ளனர். அதில், 'நாமக்கல் தலைநகரில் இயங்கி வந்த பஸ் ஸ்டாண்ட், முதலைப்பட்டி அருகில் மாற்றியமைக்கப்பட்டுள்ளது. அதனால், புதிய பஸ் ஸ்டாண்டில் இருந்து, நாமக்கல் நகரின் கட்டண நிலையை அறிவிக்க வேண்டும்' என, தெரிவித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை