உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / தீரன் தொழிற்சங்க பேரவை கூட்டம்

தீரன் தொழிற்சங்க பேரவை கூட்டம்

நாமக்கல்: தமிழக அரசு போக்குவரத்து கழக சேலம் மண்டலம், தீரன் தொழிற்சங்க பேரவையின் செயற்குழு கூட்டம், நாமக்கல் கொ.ம.தே.க., தெற்கு மாவட்ட தலைமை அலுவலகத்தில், நேற்று நடந்தது. மண்டல செயலாளர் கோபிநாத் தலைமை வகித்தார். அதில், நாமக்கல் அரசு போக்குவரத்து பணிமனை கிளை வளாகத்தில் உள்ள உணவகத்தில், தொழிலாளர்களுக்கு தர-மான உணவு, தேநீர் வழங்க வேண்டும். சேலம் மண்டலத்தில், சிறப்பு இயக்கத்தில், 275 கிலோ மீட்டருக்கு, சிங்கிள் அட்-டனன்ஸ் தான் என்ற போக்கை கைவிட வேண்டும் என்பன உள்-ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. தொடர்ந்து, கிளை தலைவர்களாக அமரராஜன், மணிசேகரன், செயலாளர்களாக செல்லையா, சரவணன், பொருளாளர்களாக ராஜ்குமார், வெங்கடாசலம் உள்ளிட்ட புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை