உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / திருவள்ளுவர் தினம் கொண்டாட்டம்

திருவள்ளுவர் தினம் கொண்டாட்டம்

நாமக்கல்: பாவேந்தர் பாரதிதாசன் இலக்கிய பேரவை சார்பில், நாமக்கல்லில் நடந்த திருவள்ளுவர் தினவிழாவில் எம்.எல்.ஏ., ராமலிங்கம், பொதுமக்களுக்கு சிலப்பதிகார புத்தகங்களை வழங்கினார்.திருவள்ளுவர் தினம் என்பது, தமிழ் புலவர் திருவள்ளுவரை பெருமைப்படுத்தும் விதமாக, தமிழக அரசால் விடுமுறை நாளாக அறிவிக்கப்பட்டு, ஆண்டுதோறும் பொங்கல் விழாவின் ஒரு பகுதியாக, மாட்டு பொங்கல் அன்று கொண்டாடப்படுகிறது. பாவேந்தர் பாரதிதாசன் இலக்கிய பேரவை சார்பில், நாமக்கல் மணிக்கூண்டு அருகில், திருவள்ளுவர் தினவிழா கொண்டாடப்பட்டது. பேரவை தலைவர் புலவர் கருப்பண்ணன் தலைமை வகித்தார்.நாமக்கல் எம்.எல்.ஏ., ராமலிங்கம், திருவள்ளுவர் படத்திற்கு மலர்துாவி மரியாதை செலுத்தினார். தொடர்ந்து அனைவருக்கும் சிலப்பதிகாரம் புத்தகங்களை வழங்கினார். நாமக்கல் கிழக்கு மாவட்ட தி.மு.க., அவைத் தலைவர் மணிமாறன், நகராட்சி கவுன்சிலர் சரவணன், பாவேந்தர் பேரவை செயலாளர் ரகோத்தமன், பொருளாளர் ஆறுமுகம், பசுமை தில்லை சிவகுமார் மற்றும் தமிழ் அறிஞர்கள், புலவர்கள், பொதுமக்கள் பங்கேற்றனர்.* குமாரபாளையத்தில், விடியல் ஆரம்பம், குறளின்பம், திருவள்ளுவர் தமிழ் இயக்கம் சார்பில் திருவள்ளுவர் தினம் கொண்டாடப்பட்டது. நிர்வாகிகள் விடியல் பிரகாஷ், பங்கயம் தலைமை வகித்தனர். திருவள்ளுவர் திருவுருவப்படத்திற்கு மலர் துாவி மரியாதை செலுத்தினர். குறள்மலை சங்க செயற்குழு உறுப்பினர் மதிவாணன், பேராசிரியை விஜயலட்சுமி உள்பட பலர் பங்கேற்றனர்.* மல்லசமுத்திரம் அருகே உள்ள, மோர்பாளையத்தில் அப்பகுதியை சேர்ந்த ரங்கநாதன் தலைமையில் நேற்று, திருவள்ளுவர் தினத்தை முன்னிட்டு பஸ் நிறுத்தத்தில் திருவள்ளுவர் உருவப்படம் வைத்து, மாலை அணிவித்து இனிப்பு வழங்கப்பட்டது 50க்கும் மேற்பட்ட இளைஞர்கள் பொங்கல் வைத்து கொண்டாடினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



முக்கிய வீடியோ