மேலும் செய்திகள்
வெறிநாய் கடித்து இரண்டு ஆடு பலி
18-Sep-2025
பள்ளிப்பாளையம், வெப்படை அருகே, லட்சுமிபாளையம் பகுதியில் மீண்டும் வெறிநாய் கடித்து மூன்று ஆடுகள் பலியாயின.பள்ளிப்பாளையம் அருகே வெப்படை அடுத்த லட்சுமிபாளையம் பகுதியில், ஏராளமானோர் ஆடுகள் வளர்த்து வருகின்றனர். கடந்த ஒரு மாதமாக, இப்பகுதியில் வெறிநாய் நடமாட்டம் அதிகரித்துள்ளது. கடந்த, 6ம் தேதி மேய்ச்சலுக்கு சென்ற ஆட்டை வெறிநாய் கடித்துள்ளது. இதில் இரண்டு ஆடுகள் இறந்துள்ளன.இந்நிலையில், இப்பகுதியை சேர்ந்த பாவாயி என்பவர் பட்டியில் ஆடுகளை வளர்த்து வருகிறார். நேற்று மதியம், 3:00 மணிக்கு வெறிநாய்கள் பட்டியில் புகுந்து ஆடுகளை கடித்து குதறியுள்ளன. இதில் மூன்று ஆடுகளும் இறந்து விட்டன. இரண்டு ஆடுகள் காயமடைந்துள்ளன. கடந்த சில நாட்ளாக இப்பகுதியில், தொடர்ந்து வெறிநாய் கடித்து ஆடுகள் இறப்பதால், கால்நடை வளர்ப்பவர்கள் அச்சமடைந்துள்ளனர்.
18-Sep-2025