உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / ரிலையன்ஸ் மெட்ரிக் பள்ளி பிளஸ் 2 தேர்வில் சிறப்பிடம்

ரிலையன்ஸ் மெட்ரிக் பள்ளி பிளஸ் 2 தேர்வில் சிறப்பிடம்

குமாரபாளையம்: குமாரபாளையம் ரிலையன்ஸ் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவ, மாணவியர், 10ம் வகுப்பு தேர்வில் சாதனை படைத்துள்ளனர்.பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள், நேற்று வெளியாகின. இதில், குமாரபாளையம் ரிலையன்ஸ் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவன் தருண் நல்லசாமி, 492 மதிப்பெண், மாணவி ரேஷ்மிகா, 488 மதிப்பெண் பெற்று இரண்டாமிடம், மாணவி ரக்சனா, 487 மதிப்பெண் பெற்று மூன்றாமிடம் பிடித்து சாதனை படைத்துள்ளனர்.மேலும், கணிதம், 10, அறிவியல் 1, சமூக அறிவியல், 1, முறையே, 100க்கு, 100 மதிப்பெண் பெற்றுள்ளனர். 490க்கு மேல், 1, 480க்கு மேல், 7 பேர், 450க்கு மேல், 30 பேர், 400க்கு மேல், 28 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். சாதனை படைத்த மாணவர்களையும், அதற்கு உறுதுணையாக இருந்த ஆசிரியர்களையும், தாளாளர் ராமசாமி, செயலர் கோமதி, பொருளாளர் கந்தசாமி, முதல்வர் பிரின்சி மெர்லின் உள்பட பலர் பாராட்டினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்