உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / கொல்லிமலையில் டூரிஸ்ட் வேன் கவிழ்ந்து விபத்து: 4 பேர் காயம்

கொல்லிமலையில் டூரிஸ்ட் வேன் கவிழ்ந்து விபத்து: 4 பேர் காயம்

நாமகிரிப்பேட்டை: சென்னை கல்பாக்கத்தை சேர்ந்த, 24 பேர், நேற்று அதிகாலை, நாமக்கல் மாவட்டம், கொல்லிமலையை சுற்றி பார்க்க டூரிஸ்ட் வேனில் வந்தனர். மாலை வரை கொல்லிமலையில் பல்வேறு இடங்களை பார்த்துவிட்டு, மாலை சென்னைக்கு திரும்பி கொண்-டிருந்தனர். முள்ளுக்குறிச்சியில் இருந்து செல்லும் மாற்று வழிப்-பாதையில் வேன் சென்றுகொண்டிருந்தது. மூலக்குறிச்சி வனத்-துறை சோதனை சாவடி அருகே வரும்போது, திடீரென டிரை-வரின் கட்டுப்பாட்டை இழந்த வேன் மலைப்பாதையோரம் கவிழ்ந்தது. இதில், கல்பாக்கத்தை சேர்ந்த ராமசாமி மனைவி ஆவுடை-யம்மாள், 65, மேகலன் மனைவி சுமதி, 46, சுசீந்திரன் மகன் அஜித், 38, சிவஞானசம்பந்தம் மகன் கார்த்திக்கேயன், 13, ஆகியோர் காயமடைந்தனர். அவர்கள் ராசிபுரம் அரசு மருத்துவம-னையில் சிகிச்சைக்கு சேர்க்கப்பட்டனர். மற்றவர்கள் சிறு காயங்க-ளுடன் தப்பினர். சாலையில் சாய்ந்த சுற்றுலா வேனை, பொக்லைன் இயந்திர உதவியுடன் மீட்டனர். மீட்பு பணியால், இரண்டு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதுகு-றித்து ஆயில்பட்டி போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை