மேலும் செய்திகள்
ஆகாய கங்கை நீர்வீழ்ச்சிக்கு தடை
23-Oct-2025
சேந்தமங்கலம், புளியஞ்சோலை ஆற்றுக்கு செல்ல விதிக்கப்பட்டிருந்த தடை நீங்கியதால், சுற்றுலா பயணிகள் ஆற் றில் குளித்து உற்சாகமடைந்தனர்.நாமக்கல் மாவட்டம், கொல்லிமலை சுற்றுலா தலமாக விளங்குகிறது. இங்கு, தமிழகம் மட்டுமின்றி வெளி மாநிலங்களில் இருந்தும் ஏராளமானோர் வந்து செல்கின்றனர். கொல்லிமலையின் தெற்குபகுதி அடிவாரத்தில், புளியஞ்சோலை ஆறு உள்ளது. கடந்த வாரம் பெய்த தொடர் மழையால், கொல்லிமலை அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டியது. வெள்ளப்பெருக்கும் ஏற்பட்டது. அருவியில் இருந்து ஆர்ப்பரிக்கும் தண்ணீர், அடிவாரத்தில் உள்ள புளியஞ்சோலை ஆற்றுக்கு வந்தடைகிறது. இதன் காரணமாக புளியஞ்சோலை ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. அதனால், சுற்றுலா பயணிகள் உள்ளே செல்ல தடை விதிக்கப்பட்டிருந்தது. கடந்த, 10 நாட்களுக்கும் மேலாக தடை இருந்த நிலையில், தற்போது கொல்லிமலையில் மழை குறைந்துள்ளது. இதனால் புளியஞ்சோலை ஆற்றில் தண்ணீர் வரத்து குறைந்ததால், சுற்றுலா பயணிகளுக்கு விதிக்கப்பட்டிருந்த தடை, நேற்று முன்தினம் நீங்கியது. இதையறிந்த சுற்றுலா பயணிகள் புளியஞ்சோலை ஆற்றில் குளித்து உற்சாகமடைந்தனர்.
23-Oct-2025