கொல்லிமலையில் குவிந்த சுற்றுலா பயணிகள் குதுாகலம்
கொல்லிமலையில் குவிந்தசுற்றுலா பயணிகள் குதுாகலம்சேந்தமங்கலம், நவ. 3-தீபாவளி பண்டிகைக்கு தொடர் விடுமுறை விடப்பட்டதால், நேற்று கொல்லிமலையில் ஏராளமான சுற்றுலா பயணிகள் குவிந்தனர். நாமக்கல் மாவட்டத்தில், மூலிகைகள் நிறைந்த மலையாக கொல்லிமலை உள்ளது. இங்கு, விடுமுறை நாட்களில் ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். அவர்கள், ஆகாய கங்கை நீர்வீழ்ச்சி, மாசிலா அருவி, நம் அருவியில் குளித்துவிட்டு அரப்பளீஸ்வரர் கோவில், எட்டிக்கையம்மன், மாசி பெரியசாமி கோவில்களில் சுவாமி தரிசனம் செய்துவிட்டு செல்கின்றனர். கடந்த, 31ல் இருந்து தீபாவளி பண்டிகைக்காக, தொடர்ந்து, 4 நாட்கள் விடுமுறை விடப்பட்டதால், பல்வேறு மாவட்டங்களில் இருந்து டூவீலர், கார்களில் ஏராளமான சுற்றுலா பயணிகள், நேற்று கொல்லிமலையில் குவிந்தனர்.கூட்டம் அதிகமானதால், மாசிலா அருவி, நம் அருவியில் நீண்ட வரிசையில் காத்திருந்து குளித்து குதுாகலமடைந்தனர்.