உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / 11ல் நாமக்கல்லில் கண்டன ஆர்ப்பாட்டம் வணிகர், பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

11ல் நாமக்கல்லில் கண்டன ஆர்ப்பாட்டம் வணிகர், பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

நாமக்கல்: 'வணிகர்களும், பொதுமக்களும் எதிர்கொள்ளும் பல்வேறு பிரச்-னைகளுக்கு தீர்வு காண வலியுறுத்தி, வரும், 11ல் நாமக்கல்லில் நடக்கும் கண்டன ஆர்ப்பாட்டத்தில், வணிகர்கள், பொதுமக்கள் திரளாக பங்கேற்க வேண்டும்' என, தமிழ்நாடு வணிகர் சங்க பேர-மைப்பின், நாமக்கல் மாவட்ட தலைவர் ஜெயக்குமார் வெள்-ளையன் தெரிவித்துள்ளார்.இதுகுறித்து, அவர் வெளியிட்ட அறிக்கை: மத்திய அரசின், வாடகை மீதான, 18 சதவீதம் வரி விதிப்பை திரும்ப பெற வேண்டும். மாநில அரசு ஆண்டுதோறும், 6 சதவீதம் கூடுதல் சொத்து வரி விதிப்பை திரும்ப பெற வேண்டும். வணிக உரிம கட்டண உயர்வு மற்றும் தொழில்வரி உயர்வை ரத்து செய்ய வேண்டும். அந்நிய நாட்டு ஆன்லைன் வர்த்தகத்தை தடை செய்ய வேண்டும். 'டிராய்' விதிமுறைகளை மீறி சாலை ஓரங்-களில் குடைகள் அமைத்து, 'சிம்' கார்டு விற்பனை செய்வோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, வரும், 11ல், மாநிலம் முழுவதும், மாவட்ட தலைநகரங்களில் கண்டன ஆர்ப்பாட்டம் நடக்கிறது.நாமக்கல் பூங்கா சாலையில், வரும், 11 காலை, 10:00 மணிக்கு நடக்கும் கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு, பேரமைப்பின் மாவட்ட தலைவர் ஜெயக்குமார் வெள்ளையன் தலைமை வகிக்கிறார். அதில், சங்கம் சாரா வணிகர்களும், பொதுமக்களும் திரளாக கலந்-துகொள்ள வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை