உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / அடிக்கடி மின்வெட்டு வியாபாரிகள் அதிருப்தி

அடிக்கடி மின்வெட்டு வியாபாரிகள் அதிருப்தி

குமாரபாளையம்: குமாரபாளையத்தில் அடிக்கடி ஏற்படும் மின்வெட்டால் பொது-மக்கள், வியாபாரிகள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். இதுகுறித்து, ம.நீ.ம., மாவட்ட அமைப்பாளர் சித்ரா கூறுகையில், ''குமாரபாளையம் நகரில் விசைத்தறி, கைத்தறி, சாயத்தொழில், ஸ்பின்னிங் உள்ளிட்ட பல்வேறு தொழில் நிறுவனங்கள் உள்ளன. அதிகளவிலான கல்வி நிறுவனங்களும் உள்ளன. இவை அனைத்-திற்கும் மின்சாரம் மிகவும் அத்தியாவசியமாகிறது. ஆனால், குமா-ரபாளையம் நகரில், நினைத்தபோதெல்லாம் மின்வெட்டு ஏற்படு-கிறது. இதுகுறித்து கேட்க, மின்வாரிய உதவி இயக்குனர், உதவி செயற்பொறியாளர், போர்மேன், லைன் மேன் உள்ளிட்ட நபர்களுக்கு போன் செய்தால், யாரும் போன் எடுப்பதில்லை. ஒவ்-வொரு முறையும், இரண்டு மணி நேரம், மூன்று மணி நேரம், நான்கு மணி நேரம் என, மின் வினியோகம் நிறுத்தி வைக்கப்படு-கிறது. இதனை மாவட்ட நிர்வாகம் கவனித்து தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ