மரக்கன்று நடும் பணி தீவிரம்
பள்ளிப்பாளையம், வடகிழக்கு பருவமழை தொடர்ந்து பெய்து வருகிறது. இந்த மழையை பயன்படுத்தி, பள்ளிப்பாளையம் யூனியனுக்கு உட்பட்ட களியனுார் பஞ்சாயத்து பகுதி முழுவதும், கடந்த, இரண்டு நாட்களாக மரக்கன்று நடும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. நீர் நிலைகள், சாலையோரம், குடியிருப்பு பகுதி, பொது இடங்களில் மரக்கன்று நடப்படுகிறது. நடப்பட்ட மரக்கன்று பாதுகாப்பாக நல்ல வளர்ச்சியடையும் வகையிலும், கால்நடைகளிடம் இருந்து பாதுகாக்கும் வகையிலும், சுற்றிலும் பாதுகாப்பு வேலி அமைக்கப்பட்டது.