உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / வரத்து இல்லாததால் மஞ்சள் ஏலம் ரத்து

வரத்து இல்லாததால் மஞ்சள் ஏலம் ரத்து

வரத்து இல்லாததால்மஞ்சள் ஏலம் ரத்துநாமகிரிப்பேட்டை, டிச. 4- நாமகிரிப்பேட்டை ஆர்.சி.எம்.எஸ்.,சில் வாரந்தோறும் மஞ்சள் ஏலம் நடத்தப்படுகிறது. ஈரோட்டிற்கு அடுத்த பெரிய மஞ்சள் மார்க்கெட் நாமகிரிப்பேட்டையில் உள்ளது. 17 தனியார் மண்டிகளும், ஆர்.சி.எம்.எஸ்., ஆகியவை மூலம் வாரந்தோறும், செவ்வாய்கிழமை குறைந்தபட்சம், 50 லட்சம் ரூபாய் வரை விற்பனையாகும். தற்போது, மஞ்சள் சீசன் முடியும் நிலையில் உள்ளதால், 15 நாட்ளுக்கு ஒருமுறை மட்டுமே ஏலம் நடந்து வருகிறது. கடந்த சிலநாட்களாக மழை பெய்ததால், மஞ்சளை தரம் பிரித்து விற்பனைக்கு கொண்டு வரமுடியவில்லை. இதனால், நேற்று மஞ்சள் மூட்டை, 10க்கும் குறைவான மூட்டைகளே வந்திருந்தது. இதனால், மஞ்சள் ஏலம் ரத்து செய்யப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை