மேலும் செய்திகள்
அரசு கலை கல்லுாரிகளில் மாணவ, மாணவியர் சேர்க்கை
13-May-2025
நாமக்கல், நாமக்கல் கலெக்டர் உமா வெளியிட்ட அறிக்கை:நாமக்கல் மாவட்டத்தில், ராசிபுரம் திருவள்ளுவர் அரசு கலைக்கல்லுாரியில், 1,115 இடம்; நாமக்கல் அறிஞர் அண்ணா அரசு கலைக்கல்லுாரியில், 1,074 இடம்; நாமக்கல் கவிஞர் ராமலிங்கம் அரசு மகளிர் கலைக்கல்லுாரியில், 1,072 இடம்; குமாரபாளையம் அரசு கலைக்கல்லுாரியில், 470 இடம்; சேந்தமங்கலம் அரசு கலைக்கல்லுாரியில், 260 இடம் என, மொத்தம், 3,991 இடங்கள் உள்ளன. 2025-26ம் கல்வி ஆண்டிற்கான பி.ஏ.,-பி.எஸ்சி.,-பி.காம்., உள்ளிட்ட இளநிலை பட்டப்படிப்பு முதலாமாண்டு மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. விண்ணப்பிக்க விரும்புவோர் இணையதளத்தில், வரும், 27 வரை பதிவு செய்யலாம்.தாமாக வெப்சைட் மூலம் விண்ணப்பிக்க இயலாத மாணவர்கள், அனைத்து அரசு கலை, அறிவியல் கல்லுாரிகளில் உள்ள சேர்க்கை உதவி மையம் மூலம் விண்ணப்பிக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது. இதற்கான கட்டணமாக, ஒரு மாணவருக்கு, 48 ரூபாய், பதிவு கட்டணமாக, இரண்டு ரூபாய் வசூலிக்கப்படுகிறது. எஸ்.சி., எஸ்.டி., பிரிவினருக்கு விண்ணப்ப கட்டணம் ஏதுமில்லை.இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
13-May-2025