மேலும் செய்திகள்
இலவச பட்டா கேட்டு கலெக்டரிடம் மனு
08-Jan-2025
வெண்ணந்துார்: வெண்ணந்துார் நகர காங்., கமிட்டி சார்பில், செயல் வீரர்கள் கூட்டம் நடந்தது. தலைவர் சிங்காரம் தலைமை வகித்தார். துணைத்தலைவர்கள் தங்கமுத்து, காசிபெருமாள் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில், மறைந்த ஈரோடு எம்.எல்.ஏ., இளங்கோவன் மற்றும் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் ஆகியோருக்கு இரங்கல் தெரிவித்தனர். தொடர்ந்து, மதுரை மாவட்ட விவசாயிகளின் வாழ்வாதாரம் பாதிக்கும்படியான ஜங்ஷன் சுரங்க உரிமத்தை மத்திய அரசு ரத்து செய்ய வேண்டும். மூத்த குடிமக்களுக்கு ரயில் பயண கட்டண சலுகையை மீண்டும் அமல்படுத்த வேண்டும். தமிழக அரசு பட்டா வழங்க உத்தரவிட்டும், வெண்ணந்துார் பகுதியில் சிலருக்கு பட்டா வழங்காமல் காலம் தாழ்த்தப்பட்டு வருகிறது. எனவே, மக்களின் நலன் கருதி பட்டா வழங்க மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
08-Jan-2025