உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / தேடப்படும் குற்றவாளி போலீசார் அறிவிப்பு

தேடப்படும் குற்றவாளி போலீசார் அறிவிப்பு

தேடப்படும் குற்றவாளிபோலீசார் அறிவிப்புஎலச்சிபாளையம், அக். 25-மணலி ஜேடர்பாளையத்தில், பெண் கொலை செய்யப்பட்டு இறந்த வழக்கில், நீதிமன்றத்தில் ஆஜராகாத நபரை தேடப்படும் குற்றவாளியாக, எலச்சிபாளையம் போலீசார் அறிவித்துள்ளனர்.எலச்சிபாளையம் அருகே, மணலி ஜேடர்பாளையத்தை சேர்ந்த ராஜேந்திரன், 48, என்பவரின் மனைவி நாகலட்சுமி கடந்த, 2020 ஜூலை, 24ம் தேதி இரவு கொலை செய்யப்பட்டு ஜேடர்பாளையத்தில் உள்ள மயானத்தில் இறந்து கிடந்தார். இதுகுறித்து, எலச்சிபாளையம் போலீசார் விசாரித்து வந்தனர். வழக்கில் தொடர்புடைய மணலி ஜேடர்பாளையம் அண்ணா நகரை சேர்ந்த கந்தசாமி, 60, என்பவர் இதுவரை நீதிமன்றத்தில் ஆஜராகவில்லை. இவரை, தேடப்படும் குற்றவாளியாக எலச்சிபாளையம் போலீசார் அறிவித்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ